பன்னா: மத்தியபிரதேச மாநிலம் பன்னாவில் பதி என்ற இடத்தில் கடந்த 17ம் தேதி சுரங்கம் தோண்டும் பணியின்போது விலை மதிப்பற்ற மூன்று வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு நேற்று மீண்டும் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரச்னா கோல்டர் என்ற பெண், நேற்று பன்னாவில் ஒரு இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 2.53 கிராம் எடையிலான விலை மதிப்பற்ற 8 வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து பன்னா மாவட்ட வைர நிபுணர் அனுபம் சிங் கூறுகையில், “கோல்டர் என்ற பெண் கண்டுபிடித்த இந்த 8 வைரங்களையும் மாவட்ட வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவை ஏலத்துக்கு விடப்படும்” என்றார்.