Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ம.பி.யில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்​திய பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த சோஹன் சிங் மீது பாலியல் வன்​கொடுமை புகார் எழுந்​தது. இந்த வழக்கை விசா​ரித்த கீழமை நீதி​மன்​றம் கடந்த 2005ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்​டனை​யும், ரூ.2,000 அபராத​மும் விதித்​தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்​திய பிரதேச உயர்நீதி​மன்​றத்​தில் அவர் மேல்முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்த உயர்நீதி​மன்​றம், 2017ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால் அவர் 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூனில்தான் விடுதலை செய்யப்பட்டார்.

இந்​நிலை​யில், தண்​டனை காலத்​துக்​கும் கூடு​தலாக சிறை​யில் அடைத்து வைத்​திருந்​த​தாகக் கூறி சோஹன் சிங் உச்சநீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி​வாலா மற்​றும் கே.வி.விஸ்​வ​நாதன் அமர்வு விசா​ரித்​தது. அப்​போது, தண்​டனைக் காலம் முடிந்த பிறகும் சோஹன் சிங்கை விடு​தலை செய்​யாதது அடிப்​படை உரிமையை மீறும் செயல் என கண்​டனம் தெரி​வித்​தனர். இதையடுத்​து, சோஹன் சிங்​குக்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். மேலும், மாநிலத்​தில் இது​போல தண்​டனைக் காலம் முடிந்​தும் யாராவது விடு​தலை செய்​யப்​ப​டா​மல் இருக்​கிறார்​களா என வி​சா​ரணை நடத்​து​மாறு மத்​திய பிரதேச சட்ட சேவை​கள் ஆணை​யத்​துக்​கு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.