போபால்: மத்திய பிரதேசத்தில் தேர்வுகளை ஒத்தி வைப்பதற்காக, கல்லூரி முதல்வர் இறந்ததாக தகவல் பரப்பிய இரு BCA மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரி லெட்டர்பேட்-ஐ போலியாக உருவாக்கி, முதல்வர் இறந்துவிட்டதால் தேர்வுகள் மற்றும் வகுப்புகள் ஒத்திவைப்பு என டைப் செய்து மாணவர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பியுள்ளனர். இத்தகவலை உண்மையென நம்பி பலரும் முதல்வரின் வீட்டுக்குச் துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளனர்.
+
Advertisement