அன்னை அனாதை இல்லத்திற்கு நில ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் முழுவதுமாக மீளப்பெறப்பட்டுஅரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது
சென்னை: அரசாணை(நிலை) எண்.3804 வருவாய்த்துறை, நாள்.28.06.1973 வாயிலாக நிலமதிப்பு மற்றும் நிலவரி ஆகியவைகள் ஏதும் இன்றியும் வருவாய் வாரியம் நிலை ஆணை எண் 24(6)-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அன்னை அனாதை இல்லத்திற்கு கீழ்க்கண்டவாறு நில ஒப்படை செய்யப்பட்டுள்ளது.
அன்னை அனாதை இல்லத்திற்கு அரசால் வழங்கப்பட்ட நில ஒப்படை நிலத்தில் வணிக நோக்க செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், வருவாய் வாரியம் நிலை ஆணை எண். 323 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நிலஒப்படை LD 5(2) பிரிவு நாள். 22.09.2020-ன் படியும், W.A.No.1099 of 2023 மற்றும் C.M.P.No.1159 of 2023 உத்தரவின் அடிப்படையிலும் நில ஒப்படையினை இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அன்னை அனாதை இல்லத்திற்கு நில ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் முழுவதுமாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவால் 14.11.2025 அன்று மாலை 05.15 மணியளவில் மீளப்பெறப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.


