குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளையில் நகைக்காக தாய், மகளை கொன்ற வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016ல் நகை மற்றும் பணத்திற்காக வசந்தா (64), அவரது மகள் தேன்மொழி (32) கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்கு தொடர்பாக தேன்மொழி வீட்டில் வேலை செய்த பெண் சத்யா, தவ்லத்பேகம், இவர்களின் ஆண் நண்பர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் நீதிமன்றம், 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது.
+
Advertisement


