Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூப்பனாரின் 24ம் ஆண்டு நினைவு தினம் ஒரே மேடையில் இணைந்த என்டிஏ கூட்டணி தலைவர்கள்

சென்னை: ஜி.கே.மூப்பனாரின் 24வது நினைவு தினம், தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் உள்ள நினைவிடத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட என்டிஏ கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, தமாகா மாநில பொதுச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், துணை தலைவர்கள் விடியல் சேகர், சக்திவடிவேல், பொருளாளர் இ.எஸ்.எஸ்.ராமன், முனவர் பாஷா, ஜவஹர்பாபு, ராஜம் எம்பி நாதன், தென்காசி மாவட்ட தலைவர் என்.டிஎஸ்.சார்லஸ், மாவட்ட தலைவர்கள் பிஜூ சாக்கோ, கே.பி.லூயிஸ், தி.நகர் கோதண்டன், அருண்குமார், கோவிந்தசாமி மரியாதை செலுத்தினர். தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், பாஜ தமிழிசை சவுந்தரராஜன், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி அதிமுக, பாஜ உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.

* கூட்டணியை உறுதி செய்த தலைவர்கள்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், மூப்பனாரின்‌ நினைவு நாளில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் கலந்து கொண்டுள்ளனர். இவை 2026 ஆட்சி மாற்றத்தின் அடித்தளம் என்றே கூறுவேன். ஒற்றுமையுடன் செயல்படுவோம்’’ என்றார்.