Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாதாந்திர போக்குவரத்து அட்டை விற்பனை வரும் 24ஆம் தேதி வரை நீட்டிப்பு!!

சென்னை: பேருந்துகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை வரும் 24ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரையிலான விருப்பம்போல் பயணம் செய்யும் அட்டைகளுக்கான விற்பனை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000, ரூ.2,000 மதிப்பிலான பயண அட்டை மாதந்தோறும் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும். மாதாந்திர சலுகை பயண அட்டை 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும். 50% சதவீதம் மாணவர் சலுகை பயண அட்டை 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அனைத்து மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், அக்டோபர் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை சனி, ஞாயிறு மற்றும் தீபஒளி திருநாளை முன்னிட்டு பயண அட்டைகள் விற்பனை வரும் 23 மற்றும் 24 ஆகிய 2 நாட்கள் நீடித்து விற்பனை செய்யப்படும் என்று போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.