Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மான்டெர்ரே டென்னிஸ் டயானா சாம்பியன்

மான்டெர்ரெ: மெக்சிகோவில் நடந்த மான்டெர்ரே ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை டயானா மேக்சிமோவ்னா ஸ்னெய்டர் (21), ரஷ்ய வீராங்கனை ஏகதேரினா அலெக்சாண்ட்ரோவா (30) மோதினர்.

போட்டியின் முதல் செட்டை, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் டயானாவும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ஏகதேரினாவும் கைப்பற்றினர். அதன் பின் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் டயானா வசப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.