சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார். நீர்நிலைகளில் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக பொறியாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார். வெள்ள தடுப்பு பணிகள், நீர் இருப்பு விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் துரைமுருகன் கேட்டறிகிறார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
+
Advertisement