புதுடெல்லி: மேகாலயா மாநிலத்தில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சிலானது, வளர்ச்சி பணிகளை செய்யாதது மற்றும் அசனங் தொகுதியின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஷில்லாங்கில் உள்ள அமலாக்கத்துறை துராவில் குறைந்தது ஐந்து இடங்களில் சோதனை நடத்தியது. இதில் பல ஆவணங்க் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement

