Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பண மசோதாக்களாக சட்டம் நிறைவேற்றம் விவகாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன் தீர்ப்பு: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஆதார் சட்டம் போன்றவற்றை பண மசோதாக்களாக நிறைவேற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வை, பணமசோதா தொடர்பான மனுக்களை முழுமையாகவும், விசாரணைக்கு பட்டியலிடப்படவேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தினார். இதனை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மனுக்களை விசாரிப்பதற்கு அரசியலமைப்பு அமர்வை அமைக்கும்போது அழைப்பு விடுப்பேன்” என்றார். இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘கடந்த பத்து ஆண்டுகளில் அரசியலமைப்பின் 110வது பிரிவின் கீழ் பண மசோதாக்களை அறிவித்ததன் மூலம் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2016ம் ஆண்டின் ஆதார் சட்டம். 2014ம் ஆண்டு முதல் 110வது பிரிவின் மொத்த தவறான பயன்பாடு குறித்த மனுக்கவை விசாரிப்பதற்கு தனி அரசியலமைப்பு அமர்வு அமைப்பதற்கு தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அவர் 2024ம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெறுவதற்கு முன் இறுதி மற்றும் உறுதியான தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம்.