மும்பை: பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா ஆகியோர் இணைந்து பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக மும்பையை சேர்ந்தவரிடம் வாங்கிய ரூ.60 கோடி கடனை அவர்கள் திருப்பி செலுத்தவில்லை.
இதனை அறிந்த தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 4ம் தேதி நடிகை ஷில்பா ஷெட்டியிடம் அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது கணவர் நடத்திய நிறுவனத்தின் எந்த விவகாரங்களையும் தான் கவனிக்கவில்லை என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தை விளம்பரப்படுத்தியதற்கான பணம் மட்டுமே தனக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ராஜ்குந்த்ராவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.