Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோகன் பகவத்தை வாழ்த்தி கட்டுரை: தலைமைத்துவத்துக்கு வயது பொருட்டல்ல என்பதை மறைமுகமாக உணர்த்திய மோடி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகிய இருவருக்கும் இந்த மாதம் 75 வயதாகும் சூழலில் மோகன் பகவத்தை வாழ்த்தி பிரதமர் மோடி கட்டுரை எழுதி உள்ளார். அதில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் மோகன் பகவத் பங்களிப்பு தனக்கும் மோகன் பகவத்திற்கும் நெருக்கம் ஆகியவற்றை குறித்து சொல்லும் மோடி. கட்டுரையில் குறிப்பிடப்படும் விஷயங்கள் மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் அதன் தலைவருக்கும் அவர் செய்யும் செய்திகளாக அமைந்துள்ளன. 75 வயது ஆகிவிட்டால் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தலைமை பொறுப்பிலிருந்து விலகி கொண்டு புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற தொனியில் மோகன் பகவத் பேசிவந்தார்.

பகவத்தை புகழ்ந்து மோடி எழுதி இருக்கும் கட்டுரையில் தாய் நாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மோகன் பகவத்தும் தானும் தனது பணியை தொடர வேண்டும் என்ற மோடியின் விருப்பம் வெளிப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுரையில் மோடி குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்கள் தலைமை பொறுப்பு தொடர்பான பிரதமரின் கருத்துகளை நேரடியாகவே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தலைமை பதவி என்பது ஒரு நிறுவனத்தின் பொறுப்பு என்பதைக் காட்டிலும் மேலானது என்று மோடி கூறியுள்ளார்.

தனிநபர் அர்ப்பணிப்பு, துல்லியமான நோக்கம் மற்றும் பாரத தாயிடம் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை தலைமை பொறுப்புக்கான வரையறையாக தலை சிறந்த ஆளுமைகள் ஆக்கியுள்ளனர் என்று மோடி கூறியுள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட அரசு தலைவர் என்ற இமாலய பொறுப்பில் முற்றிலும் பொறுப்பை வெளிப்படுத்தியவர் என்று மோகன் பகவத்தை மோடி பாராட்டியுள்ளார். வலிமை, ஆழ்ந்த ஞானம் மற்றும் இறக்க குணத்துடன் கூடிய தலைமை குணத்தை பகவத் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் சூழ்நிலைக்கேற்ற தகவமைப்பு மோகன் பகவத்தின் சிறந்த பண்புகள் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

75 வயது நிறைவு செய்தியிருக்கும் பகவத் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் தாய் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்று மனதார வாழ்த்துவதாக மோடி தனது கட்டுரையை நிறைவு செய்தார். இதன் மூலம் தலைமை துவத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை மறைமுகமாக அதே நேரம் அழுத்தமாக மோடி வெளிப்படுத்தி உள்ளார். வரும் செப்டம்பர் 17ல் 75 வயதை நிறைவு செய்ய உள்ள மோடி தானும் தலைமையில் தொடர விரும்புவதை கட்டுரையில் உணர்த்தியுள்ளார்.