Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட தஞ்சை ஓவியம், நடராஜர் சிலை உள்ளிட்ட 1,300 பொருட்கள் ஏலம்: இன்று முதல் அக்.2 வரை ஆன்லைன் மூலம் வாங்கலாம்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட தஞ்சை ராமர் தர்பாரின் ஓவியம், உலோக நடராஜர் சிலை, கையால் நெய்யப்பட்ட நாகா சால்வை உட்பட 1,300க்கும் மேற்பட்ட பொருட்கள் இன்று டெல்லியில் ஏலம் விடப்படுகிறது.  பிரதமர் மோடிக்கு வரும் பரிசுப்பொருட்கள் ஏலம் விடுவது வழக்கம். ஏழாவது முறையாக மோடிக்கு வந்த பரிசுப்பொருட்கள் ஏலம் விடப்படுகிறது.

இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட தஞ்சை ராமர் தர்பாரின் ஓவியம், உலோக நடராஜர் சிலை, கையால் நெய்யப்பட்ட நாகா சால்வை மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு 2024 இன் விளையாட்டு நினைவுப் பொருட்கள் உட்பட 1,300க்கும் மேற்பட்ட பொருட்கள் இன்று ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் அக்டோபர் 2 வரை நடைபெறும்.

இந்த ஏலம் மூலம் நமாமி கங்கை திட்டத்திற்கு ஆதரவாக ரூ.50 கோடிக்கு மேல் திரட்டப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் ஏலத்தில் ஓவியங்கள், கலைப்பொருட்கள், சிற்பங்கள், கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் மற்றும் சில விளையாட்டுப் பொருட்கள் அடங்கும்.

மிக முக்கியமாக ஜம்மு காஷ்மீரில் இருந்து சிக்கலான எம்பிராய்டரி செய்யப்பட்ட பஷ்மினா சால்வை, வாழ்க்கை மரத்தை சித்தரிக்கும் குஜராத்தில் இருந்து ரோகன் கலை மற்றும் கையால் நெய்யப்பட்ட நாகா சால்வை ஆகியவையும், பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 இல் பங்கேற்ற இந்திய பாரா-தடகள வீரர்கள் பரிசளித்த விளையாட்டு நினைவுப் பொருட்களும் இடம் பெற்றுள்ளன.