டெல்லி: பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான நட்புறவு ஆழந்த உறைநிலையில் இருப்பதாகவும், இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்றும் காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்து உள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தியது அமெரிக்காதான் என்று முதல்முதலாக தெரிவித்தவர் அந்நாட்டின் அரசுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகளில் மேற்கொண்ட பயணத்தின்போது. தனது தலையீட்டால்தான் ஆபரேஷன் சித்தூர் நிறுத்தப்பட்டதாக 61 முறை தெரிவித்தார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதனை அமெரிக்க அரசு செயலாளர் மார்கோ ரூபியோ மீண்டும் நினைவூட்டியுள்ளார் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது உற்ற நண்பர் எனக் கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, இதனால் வரை அதுகுறித்து வாய் திறக்கவில்லை என்று அவர் சாடியுள்ளார்.

