பிரதமர் மோடி, நெதன்யாகு இடையிலான தனிப்பட்ட நட்பைக் கருத்தில்கொண்டு அரசு செயல்படுகிறது : சோனியா காந்தி
டெல்லி : பிரதமர் மோடி மற்றும் நெதன்யாகு இடையிலான தனிப்பட்ட நட்பைக் கருத்தில்கொண்டு அரசு செயல்படுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீன பிரச்னையில் மோடி அரசு மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க தவறிவிட்டதாகவும், ஆழ்ந்த மௌனம் காப்பதாகவும் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் நலன்களை விட, மோடி மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பால், அரசின் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.