சென்னை: கமல்ஹாசனின் மநீம சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பொதுச்சின்னம் கேட்கப்பட்டுள்ளது. வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்காக, விருப்பப்பட்ட 10 சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு பொது சின்னத்தை ஒதுக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் நேற்று மநீம சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மநீம கட்சி பிரதிநிதிகள், புதுடெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விண்ணப்பத்தை அளித்தனர்.
+
Advertisement
