Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விஜயை கைது செய்யக்கோரி திருச்சியில் மகஇக ஆர்ப்பாட்டம்

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் மனு அளித்தனர். திருச்சி மாவட்ட மக்கள் கலை இலக்கிய கழக செயலாளர் ஜீவா அளித்த மனுவில், கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 42 பேர் உயிர் பலிக்கு காரணமான தவெக தலைவர் விஜயை கைது செய்ய வேண்டும்.

நடிகர் விஜய் ரசிகர்களிடம் கொள்ளையடித்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி, சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக விஜயை கைது செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகஇக மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.