எம்.எல்.ஏ. அசன் மவுலானா வழக்குத் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி வேளச்சேரி எம்.எல்.ஏ. அசன் மவுலானா வழக்கு தொடர்ந்தார். தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அசன் மவுலானா வழக்கு தொடர்ந்தார். 2023ல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் தந்தும் 2025 ஆகஸ்ட்.14ல் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வாக்குத் திருட்டு முறைகேட்டை அம்பலப்படுத்தியதால் உள்நோக்கத்துடன் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எல்.ஏ. அசன் மவுலானா வழக்குத் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.
+
Advertisement