மிசோரமில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களையும், பைராபி-சாய்ராங் ரயில் பாதையையும் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
மிசோரம்: மிசோரமில் ரூ.8,000 கோடி மதிப்பில் 51 கி.மீ நீளமுள்ள பெராபி-சாய்ராங் ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மிசோரமில், பிரதமர் நரேந்திர மோடி ரூ.9,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஐஸ்வாலை முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும், இது மாநிலத்திற்கு ஒரு வரலாற்று சாதனையாகும்.