Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிவேக கலப்பு இரட்டையர் டென்னிஸ் இத்தாலி இணை மீண்டும் சாம்பியன்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் கடந்த 2 நாட்கள் நடந்தன. முதல் நாள் முதல் சுற்று, காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. தொடர்ந்து 2வது நாளான நேற்று அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் ஜெசிகா பெகுலா(அமெரிக்கா)/ஜாக் டிராபர்(பிரிட்டன்) இணையுடன் இகா ஸ்வியாடெக்(போலாந்து)/கஸ்பர் ரூட்(நார்வே) இணை மோதியது.

அதில் இகா/கஸ்பர் இணை 3-5, 5-3(10-8), 10-8(10-8) என்ற செட்களில் போராடி வென்றது. ஒரு மணி 25நிமிடங்களில் கிடைத்த வெற்றி மூலம் இகா இணை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. தொடர்ந்து நடந்த 2வது அரையிறுதியில் டேனியலி கொலின்ஸ்/கிறிஸ்டியன் ஹாரிசன்(அமெரிக்கா) இணை, நடப்பு சாம்பியனான சாரா இர்ரனி/ஆந்த்ரே வவாஸ்சோரி(இத்தாலி) இணையை எதிர்த்து விளையாடியது. அதில் இத்தாலி இணை 44நிமிடங்களில் 4-2, 4-2 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றது.

தொடர்ந்து நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக்/கஸ்பர் ரூட் இணை, சாரா இர்ரனி/ஆந்த்ரே வவாஸ்சோரி இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது. அரையிறுதி சுற்று வரை வெற்றிப் புள்ளி 4ஆக இருந்தது. இறுதி ஆட்டத்துக்கு வழக்கம் போல் 6ஆக மாற்றப்பட்டது.

முதல் செட்டை இத்தாலி இணை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வேகமாக கைப்பற்றியது. டை பிரேக்கர் வரை நீண்ட 2வது செட்டையும் 7-5(10-6) என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தியது. அதனால் இத்தாலியின் சாரா/ஆந்த்ரே இணை ஒரு மணி 32 நிமிடங்களில் 2-0 என நேர் செட்களில் வென்றது. கூடவே நடப்பு சாம்பியனான இத்தாலி இணை யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும், கோப்பையையும் தக்க வைத்துக் கொண்டது.