சென்னை: சிறுபான்மையினர் நலத்திட்டங்களை மாவட்ட அளவில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தகுதி வாய்ந்த மக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்ப் வாரியம், உறுப்பினர் சுபேர்கான், ஒரு மாவட்ட வருவாய் அலுவலரை (கூடுதல் பொறுப்பு) தங்களை சிறப்புக் குழுவின் உறுப்பினராக நியமித்து ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யக்ரம் திட்டத்தை செயல்படுத்துதல், கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல நிதியுதவி அளித்தல் போன்ற சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தகுதிவாய்ந்த மக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே சிறப்புக்குழு அமைத்து ஆணையிடுகிறது.