Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மைனர் பெண் என்று தவறாக கூறி போக்சோ வழக்கு காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: மைனர் பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவையை சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் மதன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2023ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மதன் குமார் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன் ஆஜராகி, அந்த பெண்ணும் மனுதாரரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

அப்பெண்ணுக்கு 40 வயதுடைய உறவினரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததால் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நெருக்கமாக இருந்துள்ளனர். சம்பவம் நடந்த போது கல்லூரியில் 2ம் ஆண்டு படித்த அந்த பெண்ணுக்கு வயது 18. அவர் மைனர் இல்லை. எனவே, தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண் 18 வயது பூர்த்தியடையாதவராக இருக்க முடியாது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், மைனர் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, போக்சோ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, மதன் குமாரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளித்தார்.