Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திரு.வி.க.நகர் மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் சார்பில் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (13.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட சுப்புராயன் தெருவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகக் கட்டடத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பாசியம் 2வது தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இந்து சமய அறநிலையத்துறையின் இடத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையம் கட்டடப் பணி, சந்திரயோகி சமாதி சாலை சந்திப்பு கிருஷ்ணதாஸ் சாலையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகம் கட்டடப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், நேரு ஜோதி நகர் வழியாக செல்லும் ஏகாங்கிபுரம் கால்வாயில் உள்ள மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரம் மூலமாக உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, நேரு ஜோதி நகர்-பனந்தோப்பு இரயில்வே காலனி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் உள்ள பள்ளிக் கட்டடங்களை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகப் பார்வையிட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள இரயில்வே துறையினரிடம் அனுமதி பெறுவது தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியருடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

மேலும், அந்த பகுதியில் இரயில்வே துறைக்கு சொந்தமான பழுதடைந்த சாலைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக இரயில்வே துறையினரிடம் அனுமதி சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சேமாத்தம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மண்டபம் கட்டுமானப் பணியை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், முரசொலி மாறன் மேம்பாலப் பூங்காவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அறிவியல் பூங்கா (STEM Park) அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காணும் வகையில் அறிவியல் தொடர்பான சாதனங்களை தத்ரூபமாக அமைத்திட மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஏகாங்கிபுரம் முதல் தெரு, அயன்புரத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணி, சந்திரயோகி சமாதி சாலையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக் கூட கட்டடத்தின் பணிகள் மற்றும் வார்டு-71க்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்கு பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாக கட்டடப் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் அனைத்தும் திட்ட மதிப்பீட்டு கால அளவிற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின்போது, மேயர், சட்டமன்ற உறுப்பினர் , மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.