சென்னை: தமிழக அரசின் சார்பில் அயலகத் தமிழர் தினம்-2026 சிறப்பாக நடத்துவது குறித்து அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழக அரசின் சார்பில் ஜனவரி 11, 12ம் தேதி ஆகிய 2 நாட்கள் அயலகத் தமிழர் தினம்-2026 சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். அப்போது, தமிழக அரசின் சார்பில் அயலகத் தமிழர் தினம்-2026 சிறப்பாக நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார். கூட்டத்தில் தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் பைசல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement