Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

சென்னை: புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவராக திறம்பட பணியாற்றி; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உரிமை குரல் எழுப்பிய பேராயர் எஸ்றா சற்குணம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனை அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-100, கீழ்ப்பாக்கம் பகுதியில், புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இணைந்து இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சென்னை மாநகர மேயர் ஆர். பிரியா , மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ் குமார் , மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., , துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., , நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு , மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின் , சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ் , மாமன்ற உறுப்பினர். வசந்தி பரமசிவம் ஆகியோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் எஸ்றா சற்குணம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.