சென்னை: நடப்பு நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி (பென்னாகரம்) பேசியதாவது: என்னுடைய பென்னாகரம் தொகுதியில் நியாய விலைக் கடைகளை பிரிக்க வேண்டுமென்று சொன்னால், அதிகாரிகள் காரணங்கள் சொல்கிறார்கள். எனவே, உடனடியாக நியாய விலைக் கடையை பிரித்துக் கொடுப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: எந்தெந்த கடைகள் என்ற பட்டியலை கொடுங்கள். ஒரு வாரத்தில் உங்களுக்கு நான் அனுமதி தருகிறேன். பட்டியலை என்னிடம் கொடுங்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் மலைப் பகுதியில் 23 கடைகளையும் ஒரே நேரத்தில் தளி பகுதியில் திறந்தோம். இவ்வாறு அவர் பதிலளித்தார்.