பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இடம் பெற்று இருந்த 26 அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஒருவர் தவிர 25 அமைச்சர்கள் வெற்றி பெற்றனர். முதல்வர் நிதிஷ்குமார் தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜவைச் சேர்ந்த மொத்தம் 15 அமைச்சர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
2020 ஆம் ஆண்டு சுயேச்சை எம்எல்ஏவாக வெற்றி பெற்று, நிதிஷ்கட்சியில் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை , கல்வி அமைச்சராக சேர்க்கப்பட்ட சுமித் குமார் சிங், ஜமுய் மாவட்டத்தில் உள்ள சக்காய் தொகுதியில் தோல்வி அடைந்தார். அதே தொகுதியில் கடந்த முறை தோற்ற ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் சாவித்ரி தேவி இந்த முறை கிட்டத்தட்ட 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அமைச்சர் சுமித்குமார் சிங்கை தோல்வி அடைய வைத்தார்.


