Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்துசெய்தது ஐகோர்ட்!!

சென்னை : வங்கி கடன் தொடர்பாக தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலாா் இன்ஃப்ரா, எனா்ட்டியா வின்ட் இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிறுவனங்களில் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி எம்பியுமான கே.என்.அருணும் நிா்வாகியாக உள்ளாா்.

இந்நிலையில், 2013ல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து ரூ.30 கோடி பெற்ற கடனை, வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதாக ரவிச்சந்திரன் மீது புகார் எழுந்தது. இது குறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் சிபிஐ, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 போ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் 2012ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேருவின் தொடர்புடைய இடங்களில் ED சோதனை நடத்தியது. இதனிடையே சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரவிச்சந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பு வழங்கினார். அதில், "வங்கி கடன் மோசடி எதுவும் நடைபெறவில்லை, அரசு அதிகாரிகள் சம்பந்தப்படவில்லை," என தெரிவித்தார். மே லும், இந்திய ஓவா்சீஸ் வங்கியின் சமரச தீர்வு மையத்துக்கு ரூ. 15 லட்சம் செலுத்த ரவிச்சந்திரன் தரப்புக்கு உத்தரவிட்டு, சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.