சென்னை: வடகிழக்குப் பருவமழை எதிரொலியாக சென்னையில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை ஓ.எம்.ஆர் சாலையான பெருங்குடி, ஒக்கியம் மடுவு, சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட சாலைகள், மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த களஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், தலைமைப் பொறியாளர் எஸ்.பழனிவேல், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.