தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி இல்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை : கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை என தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒரு போதும் அனுமதி இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் பேசியதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.