சிறுநீரக விற்பனை முறைகேடு தொடர்பாக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை : சிறுநீரக விற்பனை முறைகேடு தொடர்பாக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிறுநீரக விற்பனை முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கத்தில், "சிறுநீரக விற்பனை முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையிலான குழு நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டது. சிறுநீரக விற்பனை முறைகேடு தொடர்பாக 2 இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, பெரம்பலூர் தனியார் மருத்துவனைகளின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது,"இவ்வாறு தெரிவித்தார்.