Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை 14 ஆண்டுகளாக மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை :அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கத்தில்,"

கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அன்று (01.10.2025) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.

1) அக்கடிதத்தில் 04.09.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்திற்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ஃப் சிரப் (பாராசிட்டமால், ஃபினைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குசோரி பெனிரமன் மெலேட் சிரப்) குறித்த விவரம் பெறப்பட்டது.

21 இது தொடர்பாக 01.10.2025 விடுமுறை தினமாக இருந்தாலும், அன்றைய தினமே சுமார் 4.00 மணியளவில் துணை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வmen (Senior Drugs Inspector) தலைமையிலான குழு, M/s.ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

3) மேலும் 01 10 2025 அன்றே தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் சிரப் (Coldnt Syrup) விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது (Sales Banned)

4) அக்குழு (01.10.2025 to 02.10.2025) மேற்கொண்ட தொடர் ஆய்வில் மருந்துகள் விதிகள்: 1945-இன்கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான கோஸ்ட்ஃப் சிரப் (Coldri Syrup) Batch No: SR-13 உள்ளிட்ட 5 மருந்துகள் அவசர் பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டு அரசு மருந்துகள் பகுப்பாய்வு கூடம். சென்னைக்கு அனுப்பப்பட்டது. பகுப்பாய்வின் முடிவில் டைஎதிலீன் கிளைகால் (Diethylene Glycol DEG) என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் கோல்ட்ரிஃப் சிரப்பில் (Coidrif Syrup) 48.6 சதவீதம் [48.6% W/V) இருப்பதாக 0210.2025 அன்று *டறியப்பட்டது.

5) மேலும். மேற்கூறிய நிறுவனத்திலிருந்து, ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிஃப் மருந்து விடுயோகிக்கப்பட்ட தகவல் கிடைக்கப்பட்ட விபரம் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள். 02.10.2025 அன்றே மேல்நடவடிக்கைக்காக அனுப்புப்பட்டது.

5) இந்த சர்ச்சைக்குரிய மருந்தை பற்றிய விவரங்கள் எல்லா மருத்துகள் ஆய்வாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, 02.10.2025 அன்று கோல்ட்ரிஃப் சிரப் முடக்கம் செய்யப்பட்டதும் அல்லாமல் M/ரீசன் பார்மசியூட்டிகள் தயாரித்த அனைத்து மருந்துகளும் முடக்கம் செய்யப்பட்டன.

7) மருந்து ஆய்வாளர்கள் குழு மேற்கொண்ட தொடர் ஆய்வில் (01.10.2025 to 1945-இன்கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாலும், கோல்ட்ரிஃப் சிரப்ட இருமல் மருந்தில் டைஎதிலீன் வேதிப்பொருள் கிளைகால் (Diethylene Glycol, DEG என்ற நச்சு கண்டறியப்பட்டதாலும், 03.10.2025 அன்றே, M/s.ஸ்ரீசன் பார்மசியூட்டிகள். நிறுவனத்திற்கு பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு (Stop Production Order) பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டது. மேலும் தொடர் நடவடிக்கையாக M/ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் முழுவதுமாக என் ரத்து செய்யப்படக்கூடாது (Cancellation) என விளக்கம் கேட்டு 03.10.2025 அன்றே குறிப்பாணையும் அனுப்பப்பட்டது.

8) மத்திய பிரதேசத்தில் முதல் உயிரிழப்பு 04.09.2025 அன்று ஏற்பட்ட நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு சுமார் 25 நாட்களுக்குப் பின்னரே. அதாவது 01.10.2025 அன்றுதான் மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடமிருந்து தகவல் பெறப்பட்டது. இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணிநேரத்தில் தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மருந்து நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொண்டு, சர்ச்சைக்குரிய மருந்தை ஆய்வுக்குட்படுத்தி, நிறுவனத்தில் உள்ள மருந்துகளையும், தமிழ்நாட்டில் விற்பனையில் உள்ள மருந்துகளையும் தடைச்செய்து அம்மருந்தில் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் டையதிலீன் கிளைகால் (DEG) இருப்பதைக் கண்டறிந்து. அந்நிறுவனத்தின் மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்தி. மூடப்பட்டு. மேல்நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் உரிமங்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, இம்மருந்து விநியோகம் செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

9) இந்த தகலல்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் உடனடியாக 03.10.2025 அன்று மின்னஞ்சல் மூலமாக மேல்நடவடிக்கைக்காக . 03.10.2025 (1) Drugs Controller General of India (DCGI) toybygg Deputy Drug Controller. South Zone, Chennal S அறிக்கை மற்றும் அந்நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்திய ஆணையும் அனுப்பப்பட்டது.

10) மேலும் 03.10.2025, அன்றே மருந்து குறித்த எச்சரிக்கையும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது

11) இதன் தொடர்ச்சியாக Coldrit Syrup என்ற மருந்தின் ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்ட Diethylene Glycol 48.6% நச்சு பொருள் இருந்ததன் காரணமாக அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை (Criminal Proceedings) எடுத்து அந்நிறுவன உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக குற்ற குறிப்பாணை (Show Cause Memo) 07:10 2025 அன்று மருந்துகள் ஆய்வாளர் மூலம் அந்நிறுவனத்தின் வெளிபுறமும். உரிமையாளரின் வீட்டின் கதவிலும் ஒட்டப்பட்டது. தலைமறைவானதால்

12) மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களிடம் இருந்த கோல்ட்ரிஃப் சிரப்பின் மொத்த இருப்பும் 08.10.2025 அன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

13) மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் (Criminal) நடவடிக்கை மேற்கொள்ள C-2 சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் 08.10.2025 அன்று புகார் கொடுக்கப்பட்டது.

14) தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வுப் பிரிவு (Special Investigation Team), 09.10.2025 அன்று அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் திருரங்கநாதன், (வயது 75) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15) மேலும், அந்நிறுகணத்தில் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ஆய் முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்நிறுவனத்தின்மீது நடவாடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டு துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.உரிய விதிமுறைகளைப் பின்பற்றி 13:10-2025 அன்று ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

17) இந்த நிறுவனத்திற்கு முதன்முதலாக 27 10 2011 அன்று உரிமம் அளிக்கப்பட்டது. 5 ώ 01.10.2019, 27.11.2020, 21.12 2020, 14.02.2022 30.06.2023 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு. சட்ட மேல்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளளன.

01:10:2019 அன்று நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில், சட்ட நடவடிக்கையின் காரணமாக மருந்து உற்பத்தி (Product Suspension) 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

27.11.2020 அன்று நடைபெற்ற ஆய்வின்படி வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் ரூபாய் 25,000 அபராதமும், சிறை தண்டனையும் (imprisonment) வழங்கப்பட்டது.

21.12.2020 அன்று நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில், சட்ட நடவடிக்கையின் காரணமாக மருந்து உற்பத்தி (Product Suspension) 2 வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

14.02.2022 அன்று நடைபெற்ற ஆய்வின்படி வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் ரூபாய் 50,000 அபராதமும், சிறை தண்டனையும் (Imprisonment) வழங்கப்பட்டது.

3006 2023 அன்று நடைபெற்ற சோதனையின்படி குறைபாடுள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்கு மருந்து உற்பத்தி (Product Suspension) நிறுத்தி வைக்கப்பட்டது.

18) தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

19) மாநிலத்திலுள்ள 397 மருந்து உற்பத்தி நிறுவனங்களில், திரவ நிலை மருந்து (Syrup) தயாரிக்கும் 50 மருந்து நிறுவனங்களில் கடந்த ஒரு வாரத்தில் முழுஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் மேலும் 52 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது முழுஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இனி வரும் காலங்களில் மருந்து உற்பத்தியாளர்களை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

20) ஒவ்வொரு மருந்து நிறுவனத்திலும் மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டாய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டிருத்தும். இந்நிறுவனம் தொடங்கிய 2011-ஆம் ஆண்டு முதல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்நிறுவனம் ஒருமுறை கூட ஆய்வு செய்யப்படவில்லை.