ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் - அமைச்சர் சிவசங்கர்
சென்னை :போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான தொகையை வழங்க ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றும் கூறினார்.