சென்னை: ரூ.2 கோடியில் நாகூர் தர்கா புனரமைக்கும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். தமிழக அரசு சார்பில் தொன்மையான தர்காக்களை புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தர்கா புனரமைப்பு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவை புனரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நாகூர் தர்கா புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹூசைன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் இறையன்பன் குத்தூஸ், மும்பை மீரான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.