திருச்சிராப்பள்ளி: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மினி மீன்பிடி துறைமுகம் அமைத்து கொடுக்க வலியுறுத்தி அனுமந்தை குப்பம் மீனவர்கள் ஈ.சி.ஆர் சாலை ஓரமாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என ஆதிரமடைந்த மீனவர்கள் இரட்டுத்தக்கார சாலையில் மறியல் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த தெருவில அனுமந்தை குப்பம் மீனவர்கள் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மீனவர்கள் 200க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களை போன்ற பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.
இந்தப்பகுதியில் மினி துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு இல்லாத காரணத்தினால் பருவமழை காலங்கள் மற்றும் புயல் காலங்களில் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் கடலில் அடிச்சி செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனை கண்டித்து அனுமந்தை பகுதி மீனவர்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றன.