மினி நிறுவனம் புதிய எஸ்இ ஆல்4 எலெக்ட்ரிக் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 66.45 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை அதிகபட்சமாக 313 எச்பி பவரையும் 494 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 5.6 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். பனோரமிக் சன்ரூப், வட்ட வடிவ டிஸ்பிளே, குரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா என பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.66.9 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


