மினி இந்தியா நிறுவனம், கன்ட்ரிமேன் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் (ஜெசிடபிள்யூ ) எஸ்யுவியை அக்டோபர் 14ம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த எஸ்யுவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.
இது அதிகபட்சமாக 308 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இடம் பெற்றுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (22ம் தேதி) துவங்குவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.