சென்னை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பால் கொள்முதல் மற்றும் பண்டிகை கால இனிப்பு தயாரிப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட பொது மேலாளர்கள், துணைப் பதிவாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ‘‘தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை சந்தைப்படுத்துதலை சிறப்பு குழுக்கள் அமைத்து அதிகரிக்க வேண்டும். கடந்த ஆண்டை விட தற்பொழுது 1.68 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் சராசரியாக அதிகரித்து உள்ளது’’ என்றார்.
+
Advertisement