சென்னை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகை 10 நாள்களில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்துக்கு தேவையான பொருட்கள் ஆன்லைன் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்துக்கு ஏற்ப விவசாயிகளுக்கு தொகை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் பால் கொள்முதல் செய்கிறது. ஆவின் நிறுவனம்தான் நிலையான விலையில் பால் கொள்முதல் செய்து வருகிறது என தெரிவித்தார்.
+
Advertisement


