பணி: போஸ்ட் கிராஜூவேட் டீச்சர்ஸ் (பிஜிடி)/டிரெய்ன்டு கிராஜூவேட் டீச்சர்ஸ் (டிஜிடி)/ பிரைமரி டீச்சர்ஸ் (பிஆர்டி).
அ. போஸ்ட் கிராஜூவேட் டீச்சர்ஸ் பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப் பிரிவுகள்: அக்கவுன்டன்சி, பயாலஜி, பயோ டெக்னாலஜி, பிசினஸ் ஸ்டடீஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளியல், ஆங்கிலம், பைன் ஆர்ட்ஸ், புவியியல், இந்தி, வரலாறு, ஹோம் சயின்ஸ், இன்பர்மேட்டிக்ஸ் பிராக்டீசஸ், கணிதம், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், உளவியல்.
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்று பி.எட்., படித்திருக்க வேண்டும்.
ஆ. டிரெய்ன்டு கிராஜூவேட் டீச்சர்ஸ் (டிஜிடி): பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்: கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், இந்தி, கணிதம், உடற்கல்வி, சம்ஸ்கிருதம், அறிவியல், எஸ்எஸ்டி.
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு முடித்து பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இ. பிரைமரி டீச்சர்ஸ் பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவு: உடற்கல்வி.
தகுதி: பிஆர்டி பணிக்கு 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று பி.எட் அல்லது ஆசிரியர் பணிக்குரிய டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ‘சிடெட்’ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். சிடெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது: 01.04.2025 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வயது வரம்பு சலுகை அளிக்கப்படும். கட்டணம்: ரூ.385/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும். அக்டோபர் 8ம் தேதிக்கு பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.www.awesindia.com என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2025.