Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணுவத்தில் பி.இ., பட்டதாரிகளுக்கு லெப்டினென்ட்

பணி: லெப்டினென்ட் (டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ்)- (டிஜிசி- 143)

மொத்த காலியிடங்கள்: 30.

வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 20 முதல் 27க்குள்.

சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.

தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/டெலி கம்யூனிகேசன்/அவியோனிக்ஸ்/ஏரோநாட்டிக்கல்/ஏரோஸ்பேஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/கம்ப்யூட்டர் டெக்னாலஜி/கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியரிங்/ ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்/ரூரல் சிவில் இன்ஜினியரிங்/என்விரோன்மென்டல் இன்ஜினியரிங்/நானோ டெக்னாலஜி/ஆர்ட்டிபிஷியல் இன்ஜினியரிங்/மிஷின் லேர்னிங்/ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ்/சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி தேர்வு: உயரம்- 157.5 செ.மீ. உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். 2.4 கி.மீ., தூரத்தை 10 நிமிடங்கள் 30 வினாடிக்குள் ஓடி முடிக்க வேண்டும். புஷ்அப்கள்-40, சிட்அப்கள்-20, புல்அப்கள்-6 எடுக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எஸ்எஸ்பியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு 40 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும். டெஹ்ராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் (இந்தியன் மிலிட்டரி அகடமி) ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். ஜூலை 2026ல் பயிற்சி தொடங்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள், இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட்டாக பணியமர்த்தப்படுவர். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2025.