சென்னை: நாடு முழுவதும் மிலாது நபி இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ)/ எப்எல்3 எப்எல்3(ஏஏ) முதல் எப்எல்11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்படுகிறது. இதை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
+
Advertisement