சென்னை: வானில் பிறை தென்பட்ட நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 5ம்தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை நினைவு கூர்ந்து, அவர் கடைபிடித்த ஒழுக்க நெறிகளின் வழியிலேயே மற்றவர்களும் நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆண்டுதோறும் மிலாது நபி கொண்டாடப்படுகிறது. முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கடைபிடித்து வருகின்றனர். மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள். இந்நிலையில், மிலாது நபி விழா செம்படம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது. எனவே மிலாது நபி விழா (இறை தூதர் முகமது நபி பிறந்தநாள்) வரும் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
+
Advertisement