லாஸ்வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில், சூப்பர் மிடில்வெயிட் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அமெரிக்க வீரர் டெரென்ஸ் கிராஃபோர்ட், மெக்சிகோ வீரர் கேனெலோ அல்வாரெஸ் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் கிராஃபோர்டின் ஆதிக்கமே காணப்பட்டது.
அசுர வேகத்தில் அவர் விட்ட குத்துகள் நடுவர்களிடம் அதிக புள்ளிகளை பெற்றுத் தந்தன. கடைசியில், 116-112, 115-113, 115-113 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற கிராஃபோர்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த போட்டியை, 70 ஆயிரம் பேர் நேரில் கண்டு களித்தனர். தவிர, கோடிக்கணக்கானோர், நெட்ஃபிளிக்ஸ் மூலம் பார்த்தனர்.