வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட்டில் இயங்குதலுமான விண்டோஸ் 39 ஆண்டுகளை நிறைவு செய்து 40 ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. விண்டோஸ் 1.0 தொடங்கிய அதன் பயணம் விண்டோஸ் 11 வரை நீடித்துக்கொண்டு வருகிறது.கடந்த 1985 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இயங்குதளம் விண்டோஸ். விண்டோஸ் இல்லாத கணிப்பொறிகளே இல்லை என்ற அளவிற்கு பிரபலமானது. விண்டோஸ் 1.0ன் முதல் வெளியீட்டிலிருந்த மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் 2 மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மேன்பட்ட கிராபிகல் யூசர் இன்டர்பேஸ், சிறந்த மெமரி திறன் கொண்டு, 1990ஆம் ஆண்டு விண்டோஸ் 3.0 விண்டோஸ் 95 ஆகியவை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து விண்டோஸ் 98ல், மீடியா பிளேயர், டிஜிட்டல் இசை மற்றும் திரைப்படங்களைப் பதிவு செய்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2001ஆம் ஆண்டு விண்டோஸ் எக்ஸ்பி-யை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2009ஆம் ஆண்டு விண்டோஸ் 7 வெர்ஷன், 2012ஆம் ஆண்டு விண்டோஸ் 8, 2015ஆம் ஆண்டு விண்டோஸ்10, சமீபத்திய பதிப்பாக விண்டோஸ் 11 வெர்ஷன் வெளியிட்டு பயனர்களை ஈர்த்துள்ளது. உலகம் முழுவதும் கணினி பயன்பாட்டாளர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே பயன்படுத்துகின்றனர். விண்டோஸ் பயன்பாட்டுக்கு வந்து 40 ஆண்டுகளாக ஒட்டி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.


