தாம்பரம்: எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் உலக ரோஜா தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் குறும்புத்தனம் மிக்க குழந்தைகளிலிருந்து மனஉறுதி கொண்ட வயது வந்த நபர்கள் வரை புற்றுநோயிலிருந்து மீண்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பின்னணி பாடகி பாப் ஷாலினி இன்னிசை நிகழ்ச்சி, திரைப்பட நடிகர்கள் கருணாகரன் மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 75 ஆயிரம் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிற நிலையில் இந்தியா எதிர்கொள்கிற இந்த மிகப்பெரிய சவால் குறித்து எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவ புற்றுநோயியல் துறையின் இயக்குநரும், முதுநிலை நிபுணருமான ராஜா, குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறை தலைவரும் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணருமான தீனதயாளனும் விளக்கினர். புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு உயிர்பிழைப்பது, தரமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் வலியுறுத்தினர்.