மெக்சிகோ : மெக்சிகோவில் சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து வெடித்து சிதறியதில் அவ்வழியாக வாகனங்களில் பயணித்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 18 வாகனங்கள் தீக்கிரையானதில் 90க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த இடமே போர்க்களமாக மாறிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
+
Advertisement