மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, நேற்று 8வது நாளாக 6,500 கனஅடியாக நீடித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 6,278 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,719 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு 15,400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 115.88 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 115.37 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 86.27 டிஎம்சியாக உள்ளது.
+
Advertisement

