சேலம்: மேட்டூர் அணையில் நீர்வரத்து 7,593 கன அடியில் இருந்து 6,723 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.14 அடியாக சரிவான நிலையில், நீர் இருப்பு 90.534 ஆக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 15,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக 15,000 கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
+
Advertisement